மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்திலும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காணப்படுகிறது.ஜூலை 24 (24-07-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவையிலும் இதேபோன்ற வானிலை நிலவும். தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.ஜூலை 25 (25-07-2026):மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்றும் வீசக்கூடும்.வெப்பநிலை நிலவரம்:ஜூலை 24 முதல் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.அதே காலகட்டத்தில் வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை: இன்று மற்றும் நாளை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.