குற்றாலத்தில் மழையின்றி வறண்ட புலியருவி; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு இல்லாததால் கடும் வெயில் நிலவுகிறது. இதன் விளைவாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன.இந்த மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீரையே நம்பியுள்ள குற்றால அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. முக்கியமான மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்திற்குள் மட்டுமே குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. அதேபோல் பழைய குற்றாலம் அருவியிலும் நீர்வீழ்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.இதற்கிடையில், புலியருவி முழுமையாக வறண்டு, தண்ணீரின்றி வெறும் பாறைகள் மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது.
இதனால் அங்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.இருப்பினும், அவர்கள் ஐந்தருவியில் ஐந்து கிளைகளாக மிதமான அளவில் பாயும் நீரில் குளித்து மகிழ்ந்ததுடன், மெயின் அருவியிலும் நீராடி தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.