உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்
2026–2027 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொதுப் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இந்த சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்ட உள்ளார்.இதற்காக தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், பட்ஜெட் விவாதங்களில் யார் யார் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.