Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில் சேவைகள் நீட்டிப்பு

ஈரோடு - சம்பல்பூர், ராமேஸ்வரம் - ஹூப்ளி ரெயில் சேவைகள் நீட்டிப்பு
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஈரோடு - சம்பல்பூர் மற்றும் ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையேயான சிறப்பு ரெயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சம்பல்பூரில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11.35 மணிக்கு புறப்படும் வாராந்திர ரெயில் (வண்டி எண்: 08311), மறுநாள் இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த ரெயில் சேவை ஆகஸ்டு 5 மற்றும் 12 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்படுகிறது.அதேபோல், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும் ரெயில் (வண்டி எண்: 08312) ஆகஸ்டு 7 மற்றும் 14 ஆகிய தேதிகள் வரை இயக்கப்பமேலும், ஹூப்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் ரெயில் (வண்டி எண்: 07355) ஆகஸ்டு 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இயக்கப்படும்.இதன் மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும் ரெயில் (வண்டி எண்: 07356), ஆகஸ்டு 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு