நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டிய நேரம் இது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இந்த சூழலில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“மூன்று முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்தே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதிகள் எதையும் இந்தத் தேர்வு நிறைவேற்றவில்லை.பள்ளிக் கல்வியை மையமாகக் கொண்ட கற்றல் முறையிலிருந்து, பயிற்சி மையங்களைச் சார்ந்த அமைப்பாக கல்வியை மாற்றியதே நீட் தேர்வின் விளைவாக உள்ளது.நீட் தொடர்பான சிக்கல்கள் வெறும் செயல்முறை குறைபாடுகள் அல்ல; அவை கட்டமைப்பு சார்ந்தவை என்பதையே சமீபத்திய சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களையாவது கருத்தில் கொண்டு, மத்திய அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு, நீட்விவகாரம்குறித்துதிறந்தமனதுடன்ஆலோசனைகளைமேற்கொள்ளவேண்டும்.அதிகாரங்களை மத்தியிலேயே குவிப்பதற்குப் பதிலாக, மாநிலங்கள், அவற்றின் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.”இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.