திருவண்ணாமலை அருகே மரத்தில் மோதிய லாரி: டிரைவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை – வேலூர் சாலையில் காரியந்தல் பகுதியில் சாலையோர புளியமரத்தில் தக்காளி ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சரவணன் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவருடன் திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சேகரன் (42) கிளீனராக பயணித்தார்.