தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன..
இந்தியாவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பில்* குடும்பங்கள் மற்றும் வீடுகள் தொடர்பான 33 முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் நாட்டின் மக்கள் தொகை, குடியிருப்பு வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களை வடிவமைக்க பயன்படுத்தப்படுகின்றன.
கேட்கப்படும் 33 கேள்விகள்:
1. கட்டிட எண்
2. மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்
3. தரையின் முக்கிய கட்டுமானப் பொருள்
4. சுவரின் முக்கிய கட்டுமானப் பொருள்
5. கூரையின் முக்கிய கட்டுமானப் பொருள்
6. வீடு எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
7. வீட்டின் நிலை (நல்லது/சராசரி/மோசம்)
8. குடும்ப எண்
9. அந்த வீட்டில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை
10. குடும்பத் தலைவரின் பெயர்
11. குடும்பத் தலைவரின் பாலினம்
12. குடும்பத் தலைவர் எஸ்.சி./எஸ்.டி./பிற பிரிவைச் சேர்ந்தவரா?
13. வீட்டு உரிமை நிலை (சொந்தம்/வாடகை உள்ளிட்டவை)
14. குடும்பம் பயன்படுத்தும் அறைகளின் எண்ணிக்கை
15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
16.
முக்கிய குடிநீர் ஆதாரம்
17. குடிநீர் வீட்டிலேயே கிடைக்கிறதா?
18. முக்கிய மின்விளக்கு வசதி
19. கழிப்பறை வசதி உள்ளதா?
20. இருந்தால் அதன் வகை என்ன?
21. கழிவுநீர் வெளியேற்றும் முறை
22. குளியலறை வசதி உள்ளதா?
23. சமையலறை மற்றும் எல்.பி.ஜி./பி.என்.ஜி. இணைப்பு உள்ளதா?
24. சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்
25. ரேடியோ/டிரான்சிஸ்டர் உள்ளதா?
26. தொலைக்காட்சி உள்ளதா?
27. இணைய வசதி உள்ளதா?
28. கணினி அல்லது மடிக்கணினி உள்ளதா?
29. தொலைபேசி/மொபைல்/ஸ்மார்ட்போன் உள்ளதா?
30. மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் உள்ளதா?
31. கார்/ஜீப்/வேன் உள்ளதா?
32. குடும்பத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய தானியம் எது?
33. தொடர்பு கொள்ள மொபைல் எண்.
இந்த தகவல்கள் முழுமையாக அரசின் மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி திட்டமிடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், தனிநபர் தகவல்களின் ரகசியம் சட்டப்படி பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.