Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கூறுவதென்ன..?

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கூறுவதென்ன..?
வெளியிட்ட முக்கிய தகவல்கள்சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22:தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 23:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். ஜூலை 24:வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும். ஜூலை 25:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுக்கும் வாய்ப்பு உள்ளது. ஜூலை 26:கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 27: தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும். வெப்பநிலை நிலவரம் ஜூலை 21 முதல் 25 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.
Advertisement
அதே நேரத்தில், உள் தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். மற்ற பகுதிகளில் இயல்பான அளவிலேயே வெப்பநிலை பதிவாகும். சென்னை வானிலை ஜூலை 22 வானம் தொடர்ந்து பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை முந்தைய நாளைப் போலவே 36–37 டிகிரி செல்சியஸ் மற்றும் 26–27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 21 முதல் 23 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே அதன் வேகம் 65 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜூலை 21 அன்று மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடலை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் அதன் வேகம் 60 கி.மீ. வரை அதிகரிக்கலாம்., ஜூலை 21 முதல் 25 வரை மத்தியமேற்கு அரபிக்கடலை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 65 கி.மீ. வேகத்தையும் எட்டக்கூடும்.இதனால் மேற்கண்ட நாட்களில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு