சென்னையில் அண்ணாமலை தலைமையில் ‘வீ த லீடர்ஸ்’ 2-வது மாநில மாநாடு நடத்த திட்டம்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகிய பிறகு **‘வீ த லீடர்ஸ்’** என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களை அரசியல் ரீதியாக செயல்படச் செய்வதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.இந்த இயக்கத்தின் முதல் மாநில மாநாடு அண்ணாமலை தலைமையில் கடந்த 12-ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.இந்த நிலையில், ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் 2-வது மாநில மாநாட்டை சென்னை நகரில் அடுத்த மாதம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.