கேள்விகளுக்கு பதிலாக தடியடி வழங்கினால் அது நாட்டின் தோல்வி: கமல்ஹாசன் எம்.பி. கருத்து
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினரும், ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “ஒரு குழந்தையின் முதல் வேதனைக் குரலிலேயே நாம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், பல இளம் உயிர்கள் இழக்கப்பட்ட பின்னரே நாம் விழித்துக் கொண்டோம்.
கற்றலுக்குப் பதிலாக பயிற்சி மையங்கள், ஆர்வத்திற்குப் பதிலாக அச்சம், தகுதிக்குப் பதிலாக முறைகேடுகள் ஆதிக்கம் செலுத்தும் கல்வி அமைப்பு சீர்குலைந்த ஒன்றாகும்.குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள்கிடைக்காமல்,அவர்களுக்குதடைகளும்தடியடியும்மட்டுமேபதிலாகவழங்கப்படுமானால்,அதுஒருநாட்டின்தோல்வியையேவெளிப்படுத்துகிறது.இந்திய இளைஞர்களே, நீங்கள் எங்களின் பெருமை. உங்கள் பொறுப்பை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள். இனி உங்கள் எதிர்காலத்தையும் கனவுகளையும் பாதுகாப்பது நாட்டின் கடமையாகும். உங்கள் இலக்குகள் என்றும் உயர்ந்தவையாக இருக்கட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.