குன்னூர்: ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கரடி..
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெயில் நிலையத்திற்குள் கரடி ஒன்று திடீரென புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கரடியைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கரடியை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.