ஒரே நாளில் மோதும் சூர்யா, நயன்தாரா, விஷால் படங்கள்... பாக்ஸ் ஆபீஸில் வெற்றி யாருக்கு?
ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழ் திரையுலகில் முக்கியமான வெளியீட்டு நாளாக மாறியுள்ளது. ஏற்கனவே சூர்யா மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படங்கள் அன்றைய தினம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஷாலின் 'மகுடம்' படமும் அதே தேதியில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'மகுடம்'திரைப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், 'மகுடம்' திரைப்படத்தை ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே நாளில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் நயன்தாரா - கவின் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' ஆகிய படங்களும் வெளியாகவுள்ளன.
இதனால் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் நேருக்கு நேர் மோதும் பாக்ஸ் ஆபீஸ் போட்டி ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.