'உங்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத பயணம்'... விஜய்க்கு அனிருத் உருக்கமான பதிவு
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக விஜய்–அனிருத் இணை திகழ்கிறது. பல வெற்றி பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளை வழங்கிய இந்த கூட்டணி, விஜய்யின் இறுதிப் படமாக வெளியான ஜனநாயகன் திரைப்படத்துடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், "ஜனநாயகன், லியோ, பீஸ்ட், மாஸ்டர், கத்தி உள்ளிட்ட படங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சிறப்பானதுடன் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.மேலும், "எல்லையற்ற நம்பிக்கையையும், வாழ்நாள் முழுவதும் மனதில் நிற்கும் நினைவுகளையும் அளித்த விஜய் சாருக்கு மனமார்ந்த நன்றி.
நாம் உருவாக்கிய இசை என்றும் நிலைத்திருக்கும்" என்றும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.அனிருத்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. விஜய்–அனிருத் கூட்டணி இனி தொடராது என்ற உணர்வால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த பதிவு இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.