Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ஈஷாவின் இலவச செஸ் பயிற்சியால் சாதனை: குறுமைய போட்டியில் முதலிடம் வென்ற பழங்குடியின மாணவி

ஈஷாவின் இலவச செஸ் பயிற்சியால் சாதனை: குறுமைய போட்டியில் முதலிடம் வென்ற பழங்குடியின மாணவி
கோவை மாவட்டம் நரசீபுரத்தில் நடைபெற்ற குறுமைய அளவிலான செஸ் போட்டியில், ஈஷாவின் இலவச பயிற்சி பெற்ற பழங்குடியின மாணவி நிவேதா, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை கைப்பற்றி கவனம் ஈர்த்துள்ளார்.தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஜூலை 16 (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பட்டியார்கோயில்பதி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த நிவேதா முதலிடத்தைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.போட்டியின் பிற பிரிவுகளிலும் ஈஷா பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தனர். 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈஷா வித்யா பள்ளியின் பவ்யஸ்ரீ இரண்டாம் இடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈஷா வித்யா பள்ளி மாணவி மூனு சௌஸ்திகா இரண்டாம் இடமும், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா மூன்றாம் இடமும் பிடித்தனர்.19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஈஷா வித்யா பள்ளி மாணவி நந்திதா முதலிடத்தையும், நந்தனா இரண்டாம் இடத்தையும் பெற்றனர். ஆண்கள் பிரிவில் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மிதுனேஷ் முதலிடமும், ஈஷா வித்யா பள்ளியின் சச்சின் மூன்றாம் இடமும் பெற்றனர்.
Advertisement
இவர்கள் அனைவருக்கும் ஈஷா சார்பில் செஸ் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.தனது வெற்றி குறித்து நிவேதா கூறியதாவது: “எங்கள் கிராமத்தில் செஸ் விளையாட்டு குறித்து முன்பு அதிக அறிமுகம் இல்லை. ஈஷா மூலம் சுவாமி தத்யா எங்கள் கிராம மாணவர்களுக்கு இலவசமாக செஸ் பயிற்சி அளித்தார். அந்தப் பயிற்சியால் பலர் இந்த விளையாட்டில் ஆர்வம் பெற்று கற்றுக்கொண்டோம். தற்போது மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன். குறுமைய போட்டியில் முதலிடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.ஈஷாவின் முழுநேர தன்னார்வலரும் செஸ் பயிற்சியாளருமான சுவாமி தத்யா கூறுகையில், “ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு செஸ் விளையாட்டின் மீது ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் இலவச பயிற்சியைத் தொடங்கினோம். மாணவர்கள் உற்சாகத்துடன் பயிற்சி பெற்று தற்போது போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.செஸ் விளையாட்டை தொடர்ந்து கற்கும் வாய்ப்பு பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களுக்கே கிடைக்கிறது. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியும் போட்டி அனுபவமும் குறைவாக உள்ளது. ஆனால் சரியான பயிற்சியும் ஊக்கமும் வழங்கப்பட்டால், அரசுப்பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை இந்த மாணவர்கள் நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு