Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

வார விடுமுறை: தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை: தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து முனையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகளும், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு செல்லும் வகையில் இன்று 110 சிறப்புப் பேருந்துகளும், 15-ந் தேதி மேலும் 110 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் தினமும் தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.மேலும், வெளி மாவட்டங்களில் உள்ள பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.வார விடுமுறை முடிந்த பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு