Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

பிஞ்சுக் கைகளில் அரசின் அன்பு பொன்னக ஒளிரப்போகிறது - அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம்

பிஞ்சுக் கைகளில் அரசின் அன்பு பொன்னக ஒளிரப்போகிறது - அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனாக இருந்து முதலமைச்சர் விஜய் சீர்வரிசை வழங்க உள்ளார். தமிழக அரசின் அன்பையும், உறவையும் வெளிப்படுத்தும் வகையில், குழந்தைகளின் பிஞ்சுக் கைகளில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு தாய்மாமனாக இருப்பேன் என்ற முதலமைச்சரின் உறுதியின் வெளிப்பாடாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை எங்கு தொடங்குவது என ஆலோசித்தபோது, மதுரையைத் தேர்வு செய்தது முதலமைச்சர் விஜய்தான். பாசத்துக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் சீராக வழங்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 22-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு தாயும், சேயும் வீடு திரும்பும் நேரத்தில் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து அன்புடன் வழியனுப்பி வைக்கப்படுவர்.

Advertisement
ஒவ்வொரு தங்க மோதிரத்துக்கும் தனித்தனி வரிசை எண் வழங்கப்படுவதுடன், முறைகேடாகத் திறக்க முடியாத பாதுகாப்பான பேக்கேஜிங்கிலும் வழங்கப்படுகிறது. தாய்மையைப் போற்றுவது, அரசு மருத்துவ சேவைகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது மற்றும் தாய், சேய்க்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இத்திட்டத்தின் முதல் கட்டமாக 4.41 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பதற்கான செலவு ரூ.1,412 ஆக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் அதற்கான செலவு ரூ.69,914 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறும் நிலை குறைந்துள்ளதை மாற்றி, முறையான மருத்துவ சிகிச்சையை வழங்கும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடித்து ஒவ்வொரு தாயும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் வீடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம். “தமிழக மக்களே, உங்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளுக்கு வாருங்கள்” என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு