Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்கள் குறித்து தென்காசியைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று முழுமையாக விலக வேண்டும். அதன்பிறகு, மேற்கில் இருந்து வீசும் காற்றின் திசை மாறி, தரைப்பகுதி மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வலுவான காற்று தொடர்ந்து வீசத் தொடங்க வேண்டும். அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய இடத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வேண்டும்.

Advertisement
இதனுடன், சென்னை எண்ணூர் முதல் உவரி வரையிலான கடலோர பகுதிகளில் 2.5 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாக வேண்டும். குறிப்பாக எண்ணூர், மாமல்லபுரம், கடலூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்திருக்க வேண்டும். இந்த அனைத்து நிலைகளும் நிறைவேறும் பட்சத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று ராஜா தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு