Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி

நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய் நடித்த ‘தி கோட்’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’, வருண் தேஜுடன் ‘மட்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

Advertisement
சமீபத்தில் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான ‘அனகனகா ஓக ராஜு’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற மீனாட்சி சவுத்ரி இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ரசிகர்களுடன் மீனாட்சி சவுத்ரியும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு