Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

கடும் வெயில் எதிரொலி: தூத்துக்குடியில் அதிகரித்த உப்பு உற்பத்தி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

கடும் வெயில் எதிரொலி: தூத்துக்குடியில் அதிகரித்த உப்பு உற்பத்தி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

‘முத்துநகர்’ என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித் தொழிலுக்கு அடுத்த முக்கிய தொழிலாக உப்பு உற்பத்தி உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னரும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல், கோடை காலத்தைப் போலவே வெயில் கொளுத்தியது. இந்த தொடர் வெப்பம் உப்பு உற்பத்திக்கு சாதகமாக அமைந்தது. பொதுவாக மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

Advertisement
ஆனால், இந்த ஆண்டு நீடித்து வரும் வெப்பமான வானிலை காரணமாக உப்பளங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வேகமாக ஆவியாகியுள்ளது. இதனால் உப்பு படிவங்கள் தடிமனாகி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், அதிக உற்பத்தி தற்போது உப்பு உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததால், சந்தைக்கு வரும் உப்பின் அளவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உப்பை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு