திருச்சி அருகே காவிரியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாயமான மற்றொரு இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி கனியூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் 10 பேர், விடுமுறை நாளான நேற்று முக்கொம்பு அணை பகுதியில் உள்ள காவிரியாற்றுக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அவர்களில் பார்த்தசாரதி, ஹரி கோகுல், யாமின் ஆகிய மூவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
Advertisement
அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கத் தொடங்கினர். இதையடுத்து மற்ற நண்பர்கள் சேர்ந்து யாமினை மீட்டனர். ஆனால், பார்த்தசாரதி நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, நீரில் மாயமான ஹரி கோகுலை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.