Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித்தீர்மானம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தனித்தீர்மானம்
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானத்தை முன்வைத்தார்.தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசினர் தீர்மானம் ஒன்றை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்து பேசினார்.தமிழ் உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகவும், தமிழர்களின் நாகரிகம் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை சட்டசபை பெருமையுடன் பதிவு செய்வதாக அவர் தெரிவித்தார்.மனோன்மணியம் சுந்தரனார் 1891-ம் ஆண்டு எழுதிய ‘மனோன்மணியம்’ நாடக நூலின் பாயிரத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து, 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் அரசு விழாக்களில் தொடக்கமாக பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அதன்பின்னர், 2021-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநில பாடல் என்ற அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டது.இந்த சூழலில், மாநில பாடல் பாடுவது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 2026-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி கடிதம் அனுப்பியுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டு முதல் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் நடைமுறை, அரசாணைகளின் அடிப்படையிலும் மரபு ரீதியாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் வழங்கப்படும் மரியாதையின் அடையாளம் என குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்க இந்த நடைமுறை அவசியம் என வலியுறுத்தினார்.இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிப்பதாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த இந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு