Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: டிரம்பின் கருத்தை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: டிரம்பின் கருத்தை நிராகரித்த ஈரான்
அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா-ஈரான் இடையே போர் வெடித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், சர்வதேச நாடுகளும் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.போர் நடவடிக்கைகளை நிறுத்தி, நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை இரு தரப்பும் நிறைவேற்றவில்லை என பரஸ்பரம் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் முறிந்தது.இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. அதனை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக கூறி வருகிறது.இந்த நிலையில், “ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டை கொண்டுள்ளது.
Advertisement
அந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வோம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.டிரம்பின் இந்த கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறுகையில், அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வரை முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறக்காது என்றும், இந்த விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதோடு, பிராந்தியம் முழுவதும் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுவதோ அல்லது அது தொடர்பாக தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகளோ உண்மையான நிலைமையை மாற்றாது என்றும் மொஹ்சென் ரெஸாயி குறிப்பிட்டார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு