Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஸ்பெயின் எல்லையை அடைய முயன்ற அகதிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

ஸ்பெயின் எல்லையை அடைய முயன்ற அகதிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
ஸ்பெயின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு அருகில் வடக்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோ அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் பரவியுள்ளது. மேலும், ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சீயடா நகரம் வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்து, மொராக்கோவுடன் நிலம் மற்றும் கடல் வழியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது.மொராக்கோவில் நிலவும் வறுமை, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்கள் பலர் ஸ்பெயினை நோக்கி புலம்பெயர முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவும் மொராக்கோவில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக ஸ்பெயின் எல்லையை கடக்க முயன்றுள்ளனர்.மொராக்கோவைச் சேர்ந்தவர்களை உடனடியாக திருப்பி அனுப்பக் கூடாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்காமல் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக சீயடா நகருக்குள் நுழைய முயன்றனர்.
Advertisement
ஒரே நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் ஸ்பெயின் எல்லையை அடைந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில், மொராக்கோ எல்லையோர கடற்கரையில் மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையில், ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீண்டும் மொராக்கோவுக்கு அனுப்பும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு