வியட்நாம்: இந்திய சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் பலி?...
வியட்நாமில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படகில் இந்திய சுற்றுலா பயணிகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலா தலத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நடந்தவுடன் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் இந்தியர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.