Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 மாணவர்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 மாணவர்கள் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ரயிலுடன் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், உள்ளூர் நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்., பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கோவிந்தபூர் ரெயில்வே கடவை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் மோதியது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனம் கடுமையாக சேதமடைந்தது.விபத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
Advertisement
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல்சிகிச்சைக்காக முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு