மராட்டியத்தில் இன்று முதல் பேருந்து கட்டணம் 13.56% உயர்வு
மும்பை, ஜூலை 18: டீசல் விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழக (MSRTC) பேருந்துகளின் கட்டணம் இன்று (ஜூலை 18) முதல் 13.56 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கட்டண உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் நாட்டின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும்.
இந்தக் கழகத்தின் கீழ் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 55 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர்.புதிய கட்டண உயர்வின் காரணமாக, முக்கிய நகரங்களுக்கு இடையிலான பேருந்து வழித்தடங்களில் பயணச்சீட்டு கட்டணம் உயர்ந்துள்ளது. டீசல் விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.