மதுபோதையில் அரசு பஸ்சை கடத்தி சென்ற இளைஞர்...
தெலுங்கானா மாநிலத்தில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜேசிபி இயந்திர ஆபரேட்டராக பணியாற்றும் அந்த இளைஞர், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் 21 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு, சுங்கச்சாவடி அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், பேருந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மதுபோதையில் அரசு சொத்தை அனுமதியின்றி இயக்கியதற்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.