Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மகளிர் ஆக்கி உலகக் கோப்பை 2026: போராட்டங்களை வென்று உலக அரங்கில் இந்தியா – ஒரு பார்வை

மகளிர் ஆக்கி உலகக் கோப்பை 2026: போராட்டங்களை வென்று உலக அரங்கில் இந்தியா – ஒரு பார்வை
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும் 2026 மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உலகக் கோப்பை மேடையை எட்டிய இந்திய அணியின் பயணம் கவனம் ஈர்த்துள்ளது.2025 மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும், போட்டியை நடத்திய சீனாவிடம் தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைக்கான நேரடி தகுதி வாய்ப்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் இழந்தது. அந்த ஏமாற்றத்தை பின்னுக்குத் தள்ளிய இந்திய வீராங்கனைகள், அடுத்த வாய்ப்பை இலக்காகக் கொண்டு தீவிரமாக தயாரானனர்.பின்னர் ஐதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா முழுத் தொடரிலும் தோல்வியறியாமல் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை எட்டியது. அரையிறுதியில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை நுழைவை உறுதி செய்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாலும், உலகக் கோப்பை இடத்தை வெற்றிகரமாகப் பெற்றது.அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்று தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியது.அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்தியா, அசத்தலான மீள்பிரவேசத்துடன் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Advertisement
தொடர்ந்து ஜப்பான் மற்றும் உருகுவே அணிகளையும் வீழ்த்தி தங்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.அரையிறுதியில் சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வென்ற இந்தியா, இறுதிப்போட்டியில் போட்டியை நடத்திய நியூசிலாந்தை 2-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.2026 மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் சீனா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை சந்திக்கிறது. இந்தப் பிரிவின் அனைத்து லீக் போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் அமைந்துள்ள வேகனர் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகின்றன.இந்திய அணியின் லீக் சுற்று போட்டிகள்:ஆகஸ்ட் 18: தென் ஆப்பிரிக்கா ஆகஸ்ட் 20:இங்கிலாந்து
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு