Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

இது என் அம்மாவின் கனவு" - காமன்வெல்த் தங்கத்தை தாய்க்கு அர்ப்பணித்த ஷர்மிளா

இது என் அம்மாவின் கனவு" - காமன்வெல்த் தங்கத்தை தாய்க்கு அர்ப்பணித்த ஷர்மிளா
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டை எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கானாவைச் சேர்ந்த சினாபு இசா 8.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, இந்த சாதனை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்தார்.
Advertisement
நாட்டிற்காக பதக்கம் வென்றிருப்பது பெருமையான தருணம் என்றும், இனியும் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்றும் கூறினார்.மேலும், இந்த வெற்றி தனது சொந்த கனவு மட்டுமல்ல, தனது தாயின் நீண்டநாள் கனவும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த சாதனையைப் பார்த்து தனது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்றும், காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை அவருக்கே அர்ப்பணிப்பதாகவும் ஷர்மிளா உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு