Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
தமிழக சட்டசபையில் இன்று 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் விஜய் கவனிக்கும் துறையும் இடம்பெற்றுள்ளதால், சட்டசபை நிகழ்வுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் 6-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் விவாதம் நிறைவடைந்தது.சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளான 22, 23-ந் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தின் தொடக்கத்தில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த தீர்மானத்தை வாசித்தார்.திரைத்துறையில் நீண்ட காலம் பயணித்து, கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த சவுகார் ஜானகி, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் என தீர்மானத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Advertisement
அதன்படி, ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு இந்த சிலிண்டர் வழங்கப்படும் என்றும், எரிவாயு சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.இன்றைய சட்டசபை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, உயர் கல்வி ஆகிய 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் முன்வைக்கின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.விவாதத்தின் நிறைவில், தங்கள் துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு