தொழில்நுட்பக் கோளாறால் ஸ்கைரூட் 'விக்ரம்-1' ராக்கெட் ஏவுதல் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு
ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள **'விக்ரம்-1'** ராக்கெட்டை இன்று நண்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.'ஆகமன்' எனப் பெயரிடப்பட்ட இந்த முதல் ஏவுதல் முயற்சியின் கவுன்டவுன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஏவுதலுக்கு இன்னும் 4 நிமிடங்கள் 59 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் தொழில்நுட்பக் காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஏவுதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு புதிய ஏவுதல் நேரம் அறிவிக்கப்பட்டு, ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.