தினத்துளிர் - இன்று துவங்கப்பட்டது
மதுரையை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகள் (Mobile Applications) உருவாக்கும் துறையில் செயல்பட்டு வரும் PHOENIX WEB INFO நிறுவனத்தின் தொடர்ச்சியாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புதிய நிறுவனமான NYXBURGH தனது முதல் தயாரிப்பாக "தினத்துளிர்" என்ற தமிழ் டிஜிட்டல் செய்தி வலைதளத்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியது.
இந்த வலைதளத்தின் தொடக்க விழா மதுரையில் நடைபெற்றது. இதில் மதுரையின் முன்னணி கல்வி நிறுவனங்களான PTR பொறியியல் கல்லூரி மற்றும் தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் திரு பா. தனவேலன் அவர்கள் கலந்து கொண்டு, தினத்துளிர் தமிழ் டிஜிட்டல் செய்தி வலைதளத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
வலைதளத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டு பாராட்டினார். குறிப்பாக, ஒரே செய்தியை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வாசிக்கும் வசதி, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் வழியாக செய்திகளை கேட்டு அறியும் சிறப்பு அணுகல்திறன் (Accessibility) வசதி, பொதுமக்களே தங்களது பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளை எளிதாக அனுப்பும் வசதி, வேகமான செய்தி வெளியீட்டு முறை, நவீன வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு போன்ற அம்சங்கள் தனித்துவமானவை என அவர் பாராட்டினார்.
மேலும், டிஜிட்டல் செய்தித்துறையில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, பொதுமக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான செய்திகளை வழங்குவதோடு, தமிழ் ஊடக உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஊடக உலகில், தரமான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய செய்தித் தளமாக தினத்துளிர் உருவெடுக்கும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன், நிறுவனம் எதிர்காலத்தில் எழுத்து ஊடகமாக மட்டுமல்லாமல் காட்சி ஊடகம் (Visual Media), மொபைல் செய்தி சேவைகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஊடக தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நிறுவனத்தின் புதிய பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தினத்துளிர் வெளியீட்டாளர் S.A. கண்ணன் அவர்கள் பேசுகையில், தரமான, நடுநிலையான மற்றும் விரைவான செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே தினத்துளிரின் நோக்கம் என்றார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செய்தி தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் தங்களது பகுதி செய்திகள், சமூக நலச் செய்திகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து நேரடியாக அனுப்பும் வசதியும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும், மாவட்டம் முதல் உலகச் செய்திகள் வரை ஒரே தளத்தில் தரமான தகவல்களை வழங்கும் முயற்சியில் தினத்துளிர் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தினத்துளிர் வெளியீட்டாளர் S.A. கண்ணன், செய்தி ஆசிரியர் B. சந்தனகருப்பன், தலைமை செய்தியாளர் S. வெற்றிவேலன், மதுரை செய்தியாளர் வடிவேல் கருப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.