Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

டெல்லியில் 2-வது நாளாகவும் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன

டெல்லியில் 2-வது நாளாகவும் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், டெல்லி முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்கள் கற்கள் வீசிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், தலைநகர் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.போராட்டக்காரர்களின் திரள் அதிகரிக்காமல் தடுப்பதற்கும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்கும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று மூடப்பட்டிருந்த 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள், இன்று இரண்டாவது நாளாகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளன.இருப்பினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் பயணிகள் வழக்கம்போல் இன்டர்சேஞ்ச் வசதியை பயன்படுத்த முடியும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக டெல்லி மெட்ரோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், பட்டேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம் மார்க், பராகம்பா ரோடு, உச்சநீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு