டியூசன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: ஆசிரியர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் சூண்டல் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நவுஷாத், தனது வீட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டியூசனுக்கு வந்த சில மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 3 சிறுமிகள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துத் துயரமடைந்துள்ளனர்.இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருச்சூர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நவுஷாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.