Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

‘டிமான்டி காலனி 3’ முதல் ‘வீரப்பன்’ வரை... ஜீ5 ஓடிடியின் மெகா அப்டேட்!

‘டிமான்டி காலனி 3’ முதல் ‘வீரப்பன்’ வரை... ஜீ5 ஓடிடியின் மெகா அப்டேட்!
சென்னை: முன்னணி ஓடிடி தளமான ஜீ5, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், ஏஐ தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகை உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படைப்புகளை ஜியோ ஸ்டுடியோஸ், மேடாக் ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. தமிழ் ரசிகர்களுக்காக, பெரும் வரவேற்பைப் பெற்ற 'கூஸ் முனிசாமி வீரப்பன்' மற்றும் 'தடயம்' வெப் சீரிஸ்களின் புதிய சீசன்கள் வெளியாக உள்ளன.
Advertisement
அதேபோல், 'அனந்தகாலம்' மற்றும் சுயாதீன ராப் நிகழ்ச்சியான 'தீக் குரல்' ஆகிய புதிய நிகழ்ச்சிகளும் அறிமுகமாகின்றன. திரைப்பட வரிசையில், அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி 3', நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள 'ஹாய்!', மேலும் 'ராவடி' ஆகிய திரைப்படங்கள் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி பிரிவில் வருண் தவான் - பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை', மாதவன் தொகுத்து வழங்கும் 'ஜீனா இசி கா நாம் ஹை 2.0', 'ரங் பாஸ்' சீசன் 4 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தெலுங்கில் 'வெங்கி அனில் 5', 'NBK111', 'ஸ்ரீமதி', மலையாளத்தில் 'கேரளா அண்டர்கிரவுண்ட்', 'மலாபார் கப்', கன்னடத்தில் 'பிட்காயின் ஸ்கேம்', 'காரவளி', மராத்தியில் 'தும்பாட்சி மஞ்சுளா', வங்காளத்தில் 'லால்பஜார்' சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலான புதிய உள்ளடக்கங்களும் ஜீ5 அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு