செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் தேர்வு
46-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் செப்டம்பர் 16 முதல் 27 வரை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தனர்.ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின் மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியின் கேப்டனாக ஸ்ரீநாத் நாராயணன் பொறுப்பேற்கிறார்.பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தமிழக வீராங்கனைகளான வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் அணிக்கு சுவாயம்ஸ் மிஷ்ரா கேப்டனாக செயல்படுகிறார்.கடந்த ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.