Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே உறுதி

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே உறுதி
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 2 முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அது நாடு முழுவதும் கவனம் பெற்றது.இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.இந்த முன்னேற்றத்தை வரவேற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், தங்களின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே பேசியபோது, இந்த ராஜினாமா இந்திய ஜனநாயகத்தின் செயல்திறனை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
Advertisement
மக்கள் அச்சமின்றி ஜனநாயக வழியில் போராடினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.அதேபோல், கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.இந்த மூன்று கோரிக்கைகளையும் அரசு எழுத்துப்பூர்வமாக ஏற்று உறுதி அளிக்க வேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அபிஜீத் திப்கே தெரிவித்தார். இறுதியாக, “கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு