Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 66 பேரின் நிலை தெரியாமல் தேடுதல் தீவிரம்

கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 66 பேரின் நிலை தெரியாமல் தேடுதல் தீவிரம்
தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில் பயணிகள் சென்ற சிறிய ரக கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்ஜ் டவுன் நகரிலிருந்து பரிமா வைனி நோக்கி கடல் மார்க்கமாக நேற்று முன்தினம் புறப்பட்ட அந்த கப்பலில் மொத்தம் 133 பேர் பயணம் செய்திருந்தனர். நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 67 பேரை உயிருடன் மீட்டனர்.எனினும், மீதமுள்ள 66 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Advertisement
அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு