Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை, ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய மொத்த விற்பனை சந்தையாகவும் இது உள்ளது.சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், கோயம்பேடு சந்தையில் இரவு நேரங்களில் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி, அதிகாலைக்குள் தங்களது கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கோயம்பேடு சந்தைக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து உள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் பெய்த கனமழை மற்றும் வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வடமாநிலங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது.இதன் தாக்கமாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக தினமும் 70 முதல் 80 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வரத்து சுமார் 50 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 7-ம் தேதி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், படிப்படியாக விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.வரத்து குறைந்துள்ளதால் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று நிலவரப்படி காய்கறிகளின் மொத்த விலை: * நாட்டு தக்காளி – ரூ.18 முதல் ரூ.25 * நவீன் தக்காளி – ரூ.40 * உருளைக்கிழங்கு – ரூ.15 முதல் ரூ.35 * கேரட் – ரூ.50 முதல் ரூ.70 * பீன்ஸ் – ரூ.60 முதல் ரூ.80 * பீட்ரூட் – ரூ.50 முதல் ரூ.60 * முட்டைகோஸ் – ரூ.20 முதல் ரூ.25 * வெண்டைக்காய் – ரூ.25 முதல் ரூ.30 * வரி கத்திரிக்காய் – ரூ.25 முதல் ரூ.30 * நாட்டு கத்திரிக்காய் – ரூ.30 முதல் ரூ.40 * பாகற்காய் – ரூ.40 முதல் ரூ.50 * புடலங்காய் – ரூ.20 முதல் ரூ.30 * சுரைக்காய் – ரூ.15 முதல் ரூ.25 * முருங்கைக்காய் – ரூ.25 முதல் ரூ.30 * சேனைக்கிழங்கு – ரூ.30 முதல் ரூ.40 * பச்சை மிளகாய் – ரூ.50 முதல் ரூ.60 * இஞ்சி – ரூ.90 முதல் ரூ.180 * பூண்டு – ரூ.130 முதல் ரூ.240 * தேங்காய் – ரூ.55 முதல் ரூ.60
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு