Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே திருமணம் : தமிழ் தயாரிப்பாளரை மணந்தார்

கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே திருமணம் : தமிழ் தயாரிப்பாளரை மணந்தார்
கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே திருமணம்: தமிழ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்துடன் புதிய வாழ்க்கை தொடக்கம்கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சர்மிளா மந்த்ரே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விழா ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஒன்றில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷாஜினி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சர்மிளா, தமிழில் வினய் ராய் நடித்த மிரட்டல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது அதிர்ஷ்டசாலி திரைப்படத்தில் நடித்துவருகிறார். நடிகையாக மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
Advertisement
சர்மிளா மந்த்ரே மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, ஜெயம் ரவி நடித்த இறைவன், பார்க்கிங் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ள சுதன் சுந்தரம், தற்போது மிஸ்டர் பாரத்*மற்றும் பென்ஸ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். திருமண நிகழ்வின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சர்மிளா மந்த்ரே, "இப்போது நான் மிஸஸ் சுந்தரம்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு