Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கனடாவில் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக இந்திய இளைஞர் கைது

கனடாவில் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக இந்திய இளைஞர் கைது
பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான தமந்தீப் கவுர், கனடாவின் எட்மொண்டன் நகரில் தங்கி பணியாற்றி வந்தார். அவரும், டெல்லியைச் சேர்ந்த 22 வயதான ரிதேஷ் குமார் என்பவரும் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 9-ஆம் தேதி, எட்மொண்டனில் உள்ள தமந்தீப் கவுரின் வீட்டுக்கு ரிதேஷ் குமார் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ரிதேஷ் குமார் தமந்தீப் கவுரின் கழுத்தை நெரித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த தமந்தீப் கவுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 12-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ரிதேஷ் குமாரை கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு