ஒருநாள் தரவரிசையில் புதிய சாதனை: முதலிடத்தை பிடித்த சுப்மன் கில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
801 புள்ளிகளை பெற்றுள்ள கில், உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்த உயரிய இடத்தை அடைந்துள்ளார்.இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை பின்னுக்கு தள்ளி, கில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.இந்த தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர்.