இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், தொடரின் கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.இந்நிலையில், சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
சிகந்தர் ராசா தலைமையில் அந்த அணி களமிறங்குகிறது.ஜிம்பாப்வே அணியில் சிகந்தர் ராசா, பிரையன் பென்னட், ரியான் பர்ல், தனகா சிவாங்கா, பென் குர்ரன், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ன்காராவா, தபா நகாராவா மற்றும் நியூமன் டோன்டோ நகாராவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.