இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
* வைபவ் சூர்வன்ஷியின் துணிச்சலாக பேட்டிங் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கிரிக்கெட் லீக் தொடரில் வைபவ் வெளிப்படுத்திய சீரான பேட்டிங் திறமை வியக்கத்தக்கது. இவரை காண்பதற்காகவே, ராஜஸ்தான் மோதும் போட்டிகளை பார்த்தேன்.
பயிற்சியில் ஆர்ச்சரின் பந்துகளை எதிர்கொண்ட விதம் பிரமிக்க வைத்தது.
* இங்கிலாந்து தொடரில் அறிமுகம் ஆவாரா வைபவ்?
இளம் வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆவது மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் 'டி-20', ஒருநாள் அரங்கில் சிறந்த வீரராக திகழ்வார் என நம்பிக்கை உள்ளது.
* வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது, இங்கிலாந்துக்கு சாதகமா?
'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் (2026) எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் பும்ரா தான்.
இவர் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு தான். எதிரணிக்கு மிகப்பெரிய சாதகம். கிரிக்கெட் ரசிகர்கள் பும்ரா விளையாடுவதையே விரும்புவர்.
* அயர்லாந்து தொடரில் தோற்றது இந்திய வீரர்களை மன ரீதியாக பாதிக்குமா?
'டி-20' உலக கோப்பையில் இரு முறை சாம்பியன் இந்தியா. லேசான பாதிப்பு இருந்தாலும், ஒரே போட்டியில் மீண்டு வந்து விடுவர். யாராவது ஒரு பேட்டர் கைகொடுத்தாலே போதும், வெற்றிப் பாதைக்கு திரும்பிவிடலாம்.
* சாம்சன், இஷான் கிஷான் என இரு விக்கெட் கீப்பரில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?
இருவரும் சிறந்த பேட்டர்கள், அவர்களது ஆட்டத்தை பார்க்க மிகவும் பிடிக்கும். நானும் ஒரு விக்கெட் கீப்பர், வலது கை பேட்டர் என்பதால், எனக்கு சாம்சனை அதிகம் பிடிக்கும்.