ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த மியான்மர்
மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, ஜனநாயகத் தலைவரான ஆங் சான் சூகி (81) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பை வரவேற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான், சூகியை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் அரசிடம் கோரிக்கை விடுத்தது.ஆனால், ஆசியானின் இந்த கோரிக்கையை மியான்மர் ராணுவ அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே விடுதலை செய்ய முடியும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இனிமேல் ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதுவர் தேவையில்லை என்றும் மியான்மர் அறிவித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் மக்கள் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதாக ராணுவத் தளபதி மின் ஆங் ஹலைங் கூறியுள்ளார். எனினும், அந்தத் தேர்தலை உலக நாடுகள் போலியான நடவடிக்கை என விமர்சித்து வருகின்றன.