அமெரிக்கா நடவடிக்கையை மாற்றும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்கா தனது தற்போதைய நடவடிக்கைகளில் மாற்றம் செய்யும் வரை ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இனி தொடரக்கூடாது என்றும், போர் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை அகற்ற வேண்டும் என்றும், பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.இதனுடன், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.இந்தக் கோரிக்கைகள் குறித்து அமெரிக்கா தரப்பில் இதுவரை உடனடி பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஒமன் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.