வெவ்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தசரா மற்றும் விஜயதசமி விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். துவாரகா பகுதியில் உள்ள ஸ்ரீ ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் அமைச்சரவை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு ராமர், லட்சுமணன், சீதை ஆகியோருக்கு ஜனாதிபதி பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து வழிபட்டார். பின்னர், ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். இதற்கிடையே, கிழக்கு டெல்லியின் ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். செங்கோட்டைக்கு அருகிலுள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற லவ் குஷ் ராம் லீலா கொண்டாட்டங்களில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சாந்தினி சவுக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோரும் பங்கேற்றனர். தீமையை வெல்வதன் அடையாளம் தசரா துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி ரேகா குப்தா, தசரா டெல்லி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நாள் என்று குறிப்பிட்டார்.