தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். திருமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு வருகின்றனர்.
Advertisement
இதேபோல், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அவ்வப்போது கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டார்.