Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

சவுதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமான சேவைகள் 20-ந்தேதி வரை ரத்து

சவுதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமான சேவைகள் 20-ந்தேதி வரை ரத்து

சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 20-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ரியாத், ஜெட்டா, தம்மாம் ஆகிய நகரங்களுக்கான விமானங்கள் இந்த ரத்து நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ஏமனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் விமான கேப்டன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

Advertisement
மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அந்நாட்டில் பாதுகாப்பு மற்றும் பதற்றம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமானப் போக்குவரத்தை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. முதலில் வரும் 17-ந்தேதி வரை சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்த ஏர் இந்தியா, தற்போது அந்தக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. ஏர் இந்தியா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் வரும் 20-ந்தேதி வரை இயங்காது. ஏற்கெனவே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இண்டிகோ நிறுவனம் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை வரும் 24-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது. ஆகாசா ஏர் நிறுவனமும் ரியாத்துக்கான விமானங்களை வரும் 24-ந்தேதி வரையிலும், ஜெட்டாவுக்கான சேவைகளை வரும் 21-ந்தேதி வரையிலும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு