மராட்டியத்தில் மீண்டும் நிலநடுக்கம்
மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.நான்டேட், ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து பல மிதமான நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகின. ரிக்டர் அளவுகோலில் 3.6 முதல் 4.6 வரை தீவிரம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிர்வுகளை உணர்ந்த மக்கள் பலர் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளி பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.
இதனால் சில மணி நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. நிலைமையை மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.